2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (19) நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 61 ஆவது போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு லக்னோவில் அமைந்துள்ள எகானா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
18 ஆவது இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதி பிளேஆஃப் இடத்திற்கான தங்கள் முயற்சியை வலுப்படுத்த இந்த ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான LSG அணி முயற்சிக்கும்.
தற்போது 11 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் உள்ள LSG, போட்டியில் நீடிக்க மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
அப்படியிருந்தும், அவர்களின் தகுதி ஏனைய போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்தது.
அதேநேரம், பேட் கம்மின்ஸின் SRH அணியானது ஏற்கனவே போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது.
ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
அதில் லக்னோ அணியானது 4 வெற்றிகளையும், ஹைதராபாத் அணியானது ஒரு வெற்றியையும் பதிவு பதிவு செய்துள்ளது.