UPDATS:நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் விபத்து- உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!!

விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் விபத்தில் இறந்த எட்டு பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

இந்த விபத்தில் 05 ஆண்களும் 03 பெண்களும் உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!