விஎப்எஸ். (VFS) வீசா ஒப்பந்தத்தைச் சூழ்ந்திருந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இளுக்பிடிய, உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததற்காக 10 மாதமாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (01)நீதிமன்றத்தில் நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்டார்.
உயர் நீதிமன்றம் இந்த நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கான தண்டனையை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வழங்கத் தீர்மானித்துள்ளது.
மன்னிப்பு கோரிய ஹர்ஷ இளுக்பிடிய, நீதிமன்ற உத்தரவை புறக்கணித்ததை இன்று(1) ஒப்புக்கொண்டுள்ளார். இது, இலங்கை அரசின் வீஎப்எஸ்(VFS ) வீசா ஒப்பந்தம் தொடர்பான பரபரப்பான வழக்கில் முக்கிய காரணியாக விளங்குகின்றது.
இந்த வழக்கு, முன்னாள் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், பாடலி சம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் மூவரும், நீதிமன்ற உத்தரவை உயர் அதிகாரிகள் கடைப்பிடிக்கத் தவறியதை கடுமையாகச் சாடினர். ஹக்கீம் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவை முதலில் நிறைவேற்றியாக வேண்டுமென காரசாரமாக வாதிட்டார்.
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இந்த வீசா ஒப்பந்தம் 2023ஆம் ஆண்டிலிருந்தே அமலில் உள்ளதாகவும், இதனால் அரசுக்கு சுமார் ரூ. 3.71 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
2024 ஜூலை 12 அன்று பாராளுமன்றம் கோரிய விளக்க விசாரணை(Forensic Audit) இதுவரை வெளியாகாததற்கு விளக்கம் தேவைப்படுவதாகவும், இது தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான நிர்வாகத்தினரை காப்பாற்ற முயற்சிப்பதன் அறிகுறியாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெஸ் உடன் ஜனாதிபதி திஸாநாயக்கவுக்கு நெருக்கமான உறவு இருப்பதாகவும், வீஎப்எஸ்(VFS) ஒப்பந்தத்தில் அலெஸ் முக்கிய பாகத்தை வகித்ததாகவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மேலும், அவர் உண்மை வெளிவர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஹர்ஷ இளுக்பிடிய கடந்த ஆண்டு செப்டம்பரிலிருந்து ,நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக உயர் நீதிமன்றத்தால் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கு, உலகளாவிய வீசா சேவை வழங்கும் நிறுவனமான VFS Global உடன் உள்ள ஒப்பந்தத்தோடு தொடர்பானது.
வீஎப்எஸ்(VFS Global )நிறுவனத்தின் வீசா வழங்கும் முறையும், அதன் கட்டணங்களும் சமூக ஊடகங்களில் ஒரு விமானப் பயணியின் முறைப்பாடு மூலம் பரவலான கவனத்தை ஈர்த்ததது. இதையடுத்து, பாராளுமன்ற பொதுத் நிதிக் குழு மேற்கொண்ட விசாரணையில், VFS Global நிறுவனம் உரிய டெண்டர் நடைமுறையின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும், போட்டித் திறனை இழக்க நேர்ததால் அரசுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டது என்றும் தெரியவந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், மத்திய அமைச்சரவையின் வீசா செயல்பாட்டு பணிகளை GBS Technology Services மற்றும் IVS Global-FZCO (VFS VF Worldwide Holdings LTD கூட்டமைப்பு) என்பவர்களிடம் செயலாற்று முடிவை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவின் மூலம் நிறுத்தி வைத்தது.
அதற்குப் பதிலாக, முந்தைய விரைவான பயண அங்கீகார (ETA) நடைமுறையை மீளப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை ஹர்ஷ இளுக்பிடிய செயல்படுத்தாததா
லேயே அவர் கைது செய்யப்பட்டு 10 மாதங்களாக விளக்க மறியலில் இருந்து வருகின்றார்.