அந்தமானில் ஏவுகணைச் சோதனை! விமானங்கள் பறக்கத் தடை விதிப்பு!

அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுவதால் குறித்த வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய அரசினால் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

தற்போது, முப்படைகளின் உத்தரவின் பேரில், அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. இதனால் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாளை காலை 7 மணி முதல் 10 மணி வரை அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுற்றிய 500 கிலோமீட்டர் நீள வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!