அமெரிக்காவின் நியூ ஓர்லின்ஸ் (New Orleans) சிறைச் சாலையிலிருந்து 10 கைதிகள் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைதிகள் நேற்றையதினம் (16) நள்ளிரவுக்குப் பின் கழிவறைச் சுவரை உடைத்துத் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறைச்சாலை சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்ற பகுதியில் காணப்படுகின்றமையினால் இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தப்பிச் சென்ற 10 கைதிகளில் ஒன்பது பேர் ஆபத்தானவர்கள் என்றும் அவர்களிடம் ஆயுதம் இருக்கலாம் என்றும் அந்நாட்டு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கைதிகளை கைது செய்வதற்கு அந்நாட்டு பொலிசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தப்பிச் சென்ற கைதிகளில் சிலர் கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.