சவுதி அரேபியாவின் தமாமில் இடம்பெறும் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பாகியுள்ளன. எதிர்வரும் 19ம் திகதி வரை இடம்பெறவுள்ள குறித்த போட்டிகளில் இலங்கை சார்பாக 19 வீர வீராங்கணைகள் பங்குபற்றவுள்ளனர்.
இன்று இடம்பெறும்இரு பாலருக்கமான 100 மீற்றர் முதற்சுற்று ஓட்டப் போட்டிகள் மற்றும் 400 மீற்றர் ஆடவருக்கான முதற்சுற்று ஓட்டப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் போட்டியிடவுள்ளனர்.