இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் 14 வயது வீரர் வைபவ்

இங்கிலாந்து செல்ல உள்ள யு-19 இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு ஜூன், ஜூலை மாதங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய யு-19 கிரிக்கெட் அணி, 50 ஓவர் கொண்ட பயிற்சி போட்டி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 அல்லது 4 நாட்கள் அடிப்படையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 

இதற்காக சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான 17 வயது ஆயுஷ் மாத்ரே தலைமையிலான 16 பேர் கொண்ட யு-19 இந்திய அணியை பிசிசிஐயை நேற்று அறிவித்தது. இந்த அணியில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் 14 வயது வைபவ் சூரியவன்ஷி இடம்பிடித்து உள்ளார்.

தற்போது நடந்து ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 7 போட்டிகளில் களமிறங்கி 252 ரன்களை (ஸ்டிரைக் ரேட் 206.56) சூரியவன்ஷி எடுத்து உள்ளார். 
இதில் ஒரு போட்டியில் 35 பந்துகளில் சதம் மற்றும் மற்றொரு போட்டியில் 15 பந்துகளில் 40 ரன், சென்னைக்கு எதிராக போட்டியில் 33 பந்து 57 ரன் விளாசி உள்ளார். இதேபோல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 206 ரன்கள் எடுத்து உள்ளார். 

பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் 94 ரன் எடுத்து உள்ளார். 16 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் விவரம்: ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சவுகான், கிலான் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, ராவ் ராகவேந்திரா, முகமது ஏனான், ஆதித்யா சிங், அன்மோலி ரனா.

யு19 ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடிய தமிழ்நாட்டு வீரர் ஆந்த்ரே சித்தார்த்துக்கு (18) இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் வாய்ப்பு தரப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் முடிந்த ரஞ்சி கோப்பையிலும் சித்தார்த் 8 ஆட்டங்களில் 5 அரை சதம் உட்பட 612 ரன் விளாசினார். அதனால் ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை அணி வாங்கியது. ஆனால் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட அவர் விளையாடவில்லை.

இந்திய அணி: 

ஆயுஷ் மத்ரே
வைபவ் சூர்யவன்ஷி
விஹான் மல்ஹோத்ரா
மௌல்யராஜ்சிங் சாவ்தா
ராகுல் குமார்
அபிக்யான்
ஹர்வன்ஷ் பங்கலியா
ஆர்.எஸ். அம்ப்ரிஷ்
கனிஷ்க் சவுகான்
கிலன் படேல், ஹெனில் படேல்
யுதாஜித் ஈன ராகாவ்
பிரணவ் ராகாவ்
பிரணவ் ராகாவ்
பிரணவ் ராகாவ்
அன்மோல்ஜீத் சிங் 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply

error: Content is protected !!