இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கிண்ணத்தின் போது அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது.

இதனால் இந்திய அணியின் அணி தலைவராக இருந்த ரோகித் சர்மா மீதும் மூத்த வீரரான விராட் கோலியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன

இதையடுத்து இந்திய அணி அடுத்த உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி வரும் நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்தார் ரோகித் சர்மா.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் போட்டிகளில் தாம் தொடர்வேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், இங்கிலாந்து சுற்றுத்தொடருக்கான அணியை அறிவிப்பதற்கு முன்பாக தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

இதேவேளை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வு பெறக்கூடாது என்று அணியின் முன்னாள் வீரர்கள் நவ்ஜோத் சிங் சித்து, சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்

மேலும் இந்திய அணி அடுத்த மாதம் ஜூன் 20-ம் திகதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட உள்ளதுடன் இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

நன்றி

Leave a Reply

error: Content is protected !!