இரட்டை சதம் விளாசி ஜாம்பவான்கள் சாதனைகளை தகர்த்த சுப்மன் கில்

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. 

கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் பல சாதனைகளை சுப்மன் கில் படைத்துள்ளார். அதன்படி SENA நாடுகளில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.

இதன்மூலம் முன்னாள் இந்திய ஜாம்பவான்களை சாதனையை சுப்மன் கில் தகர்த்துள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.

23 வயது 39 நாட்கள் – எம்.ஏ.கே. பட்டோடி vs இங்கிலாந்து, டெல்லி, 1964

25 வயது 298 நாட்கள் – சுப்மன் கில் vs இங்கிலாந்து, எட்ஜ்பாஸ்டன், 2025

26 வயது 189 நாட்கள் – சச்சின் டெண்டுல்கர் vs நியூசிலாந்து, அகமதாபாத், 1999

27 வயது 260 நாட்கள் – விராட் கோலி vs மேற்கு ஆப்பிரிக்கா, நார்த் சவுண்ட், 2016

அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல்

சுப்மன் கில் 222 பர்மிங்காம் 2025

சுனில் கவாஸ்கர் 221 ஓவல் 1979

ராகுல் டிராவிட் 219 ஓவல் 2002

சச்சின் டெண்டுல்கர் 193 லீட்ஸ் 2002

ரவி சாஸ்திரி 187 ஓவல் 1990

மினூ மங்காட் 184 லார்ட்ஸ் 1952

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply

error: Content is protected !!