வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 50க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகரிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொக்கானி நகரில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரவு விடுதியின் கட்டிடம் முற்றாக தீயில் சிக்குண்டுள்ளதையும் கரும் புகை மண்டலம் எழுவதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இசைநிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை தீ ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Discover more from SARINIGAR
Subscribe to get the latest posts sent to your email.