மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷை நாளை (02) எதிர்கொள்ளவுள்ளது.
இந்தப் போட்டியானது நாளை பிற்பகல் 02.30 மணிக்கு கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகும்.
இன்னும் சில ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் 2027 ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான சரியான வீரர்களை இலங்கை அடையாளம் காண விரும்புகிறது.
சரித் அசலங்கா தலைமையிலான அணி, 2021 செப்டம்பர் முதல் சொந்த மண்ணில் விளையாடும் ஒருநாள் போட்டிகளில் தங்கள் சாதனையை கட்டுக்குள் வைத்திருக்க இந்தப் ஆட்டத்தில் தீவிரமாக முயற்சிக்கும்.
ஏனெனில் அவர்கள் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை கூட இழக்கவில்லை.
பங்களாதேஷைப் பொறுத்தவரை, புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் மெஹிடி ஹசன் மிராஸ், அடுத்த 12 மாதங்களுக்கு ஒருநாள் போட்டிகளில் அணியை வழிநடத்துவார்.
அதனால், இந்த ஆட்டம் மிகுந்த எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு அணிகளும் இதுவரை 57 ஒருநாள் போட்டிகளிலும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
அதில் இலங்கை அணி 43 வெற்றிகளையும், பங்களாதேஷ் 12 வெற்றிகளையும் பெற்றுள்ளன.