எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து! – Athavan News

எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று  நானுஓயாவில் விபத்திற்குள்ளானது.

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனத்தில்  2 தாங்கிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தினையடுத்து வீதியில் வழிந்தோடிய எரிபொருளை பொதுமக்கள் வாளிகள் மற்றும் போத்தல்களில் எடுத்துச்செல்வதைக் காணக்கூடியதாக  இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!