ஐதராபாத் -மும்பை அணிகள் இன்று மோதல் – Athavan News

IPL  கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறவுள்ள  41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில்,  இலங்கை நேரப் படி இரவு 7.30 மணிக்கு  இப் போட்டி நடைபெறவுள்ளது.

நடைபெற்று வரும் IPL  தொடரில் ஐதராபாத் அணி 7 போட்டிகளை எதிர்கொண்டு அதில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

மேலும் மும்பை அணி 8 போட்டிகளை எதிர்கொண்டு அதில்   4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!