இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒப்பரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா . ‘ஒப்பரேஷன் சிந்துார்’ என்ற பெயறரில் பதில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை அழித்தது.
இந்நிலையில் போர் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் விமானப் படைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாக வெற்றிகரமாக செய்துள்ளோம் எனவும் விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் இந்திய இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
இதேவேளை, ஒபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் குறித்து சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.