கடந்த 07 மாதங்களில் 922 கிலோ ஹெரோயின் பறிமுதல்! – Athavan News

இந்த ஆண்டின் கடந்த ஏழு மாதங்களில் இலங்கை பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து நாடு முழுவதும் நடத்திய கூட்டு நடவடிக்கைகளின் போது மொத்தம் 922 கிலோ கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ.வுட்லர் இந்த விடயத்தைக் கூறினார்.

இந்த கூட்டு நடவடிக்கைகள் 2025 ஜனவரி 1, முதல் 2025 ஜூலை 11 வரையான காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தக் காலக்கட்டத்தில் அதிகாரிகள் 1,386 கிலோ கிராம் ஐஸ், 10,895 கிலோ கிராம் கஞ்சா, 22 கிலோ கிராம் கொக்கெய்ன் மற்றும் 329 கிலோ கிராம் ஹாஷ் போன்ற போதைப்பொருட்களை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின் போது சுமார் 106,000 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2025 ஏப்ரல் 13 முதல் 2025 ஜூலை 12 வரை நடத்தப்பட்ட சிறப்பு குற்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 35,442 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் இதன்போது கூறினார்.

நன்றி

Leave a Reply