இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்க முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக வரிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான விவாதங்களை மேற்கொள்ள நிதி அமைச்சு தொடங்கியுள்ளது.
அதன்படி, இன்று (18) இலங்கை பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரிகளுக்கும் இடையே ஒரு மெய்நிகர் சந்திப்பு நடைபெற உள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தலைமையில், தொடர்புடைய அரசு அதிகாரிகள் இந்த கலந்துரையாடலை நடத்துவார்கள்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதே இந்த சந்திப்பின் முதன்மையான நோக்கமாகும்.
ஆரம்பத்தில் இலங்கை மீது 44% வரியை விதித்த அமெரிக்கா, அண்மையில் அதை 30% வரிகளாக திருத்தியது.
இந்த வரிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 01 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருத்தப்பட்ட கட்டணங்களை மேலும் குறைக்க இலங்கை அதிகாரிகள் தற்போது அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.