கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்


கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) காலமானார்.

அவருக்கு கடந்த பிப்ரவரி 14-ம் திகதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், வைரசுகள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்பும் ஏற்பட்டிருந்தது. 

மருத்துவமனையில் 5 வாரங்களுக்குமேலாக சிகிச்சையில் இருந்து போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த போப் பிரான்சிஸ் இன்று காலமானார். காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 

போர் பிரான்சிஸ் மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள

News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!

JOIN NOW


🎧 Listen Live on Aha FM – Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply

error: Content is protected !!