கால்வாயில் கவிழ்ந்த கார்… இருவர் பலி…

மஹியங்கனை – பதுளை வீதியில் பயணித்த காரொன்று கால்வாயில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாபகடவெவ 17வது மைல்கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாபகடவெவ பொலிஸ் பயிற்சி கல்லூரி அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் கிராம மக்கள் இணைந்து இக்காரை மீட்டுள்ளனர்.

இருப்பினும், காருக்குள் இருந்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் அம்பியுலன்ஸ் மூலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    The post கால்வாயில் கவிழ்ந்த கார்… இருவர் பலி… appeared first on Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka.

    நன்றி

    Leave a Reply