கொலம்பியாவின் பல பிரதேசங்களில் மஞ்சள் காய்ச்சல் தொற்று பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டில் ஆரம்பமான இந்த தொற்றால் இதுவரை 74 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 34 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலம்பியா அரசாங்கம், நாட்டில் அவசர சுகாதார நிலையை அறிவித்துள்ளதோடு
மஞ்சள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்படும் பெரும்பாலானோர் அதன் முதற்கட்டத்திலேயே குணமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும் சுமார் 15 சதவீதமானோர் இத்தொற்றால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு 10 முதல் 14 நாட்களுக்குள் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.