தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் காப்பாளரும் – துடுப்பாட்ட வீரருமான ஹென்ரிச் கிளாசென் (Heinrich Klaasen) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (02) அறிவித்தார்.
கிளாசனின் அபாரமான ஆட்டத்தை விரும்பும் அவரது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த முடிவு ஒரு பேரதிர்ச்சியாக அமைந்தது.
33 வயதான கிளாசென், கடந்த ஆண்டு ஜனவரியில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார்.
ஒட்டுமொத்தமாக கிளாசென் தென்னாப்பிரிக்க அணிக்காக 60 ஒருநாள் போட்டிகள், 58 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 2,141 ஓட்டங்களையும், டி:20 கிரிக்கெட்டில் ஆயிரம் ஓட்டங்களையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 104 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக அவர் கடைசியாக விளையாடினார்.