டெல்லி கெப்பிட்டல் : துணை தலைவர்!

டெல்லி கெபிடல்ஸ் அணியின் துணைத் தலைவராக டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 18-வது சீசன் வரும் 22-ம் திகதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவராக அக்சர் படேல், கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது துணை தலைவராக தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 40 வயதான, டு பிளெஸ்ஸிஸ் கடந்த 3 சீசன்களிலும் ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.

ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்துக்கு முன்னதாக அந்த அணி அவரை விடுவித்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் டெல்லி அணி அவரை ஏலம் எடுத்திருந்தது. கடந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியிருந்த டெல்லி கெபிடல்ஸ் இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தில் வரும் 24-ம் திகதி லக்னோ அணியுடன் மோதுகிறது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!