பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான நேற்றுடன் இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார்.
இலங்கை டெஸ்ட் அணியில் ஒன்றரை தசாப்தங்களுக்கும் மேலாக விளையாடிய ஏஞ்சலோ மேத்யூஸ், 119 டெஸ்ட் போட்டிகளில் 211 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார்.
இதுவரை விளையாடிய போட்டிகளில் 8214 ஓட்டங்களையும் 16 டெஸ்ட் சதங்களையும் 45 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.
அந்தவகையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது நாளான நேற்று தைஜுல் இஸ்லாம் பந்தில் மோமினுல் ஹக்கிடம் பிடிகொடுத்து நான்காவது விக்கெட்டாக ஆட்டமிழந்த ஏஞ்சலோ மேத்யூஸ், ரசிகர்களுக்கு தலைவணங்கி தனது டெஸ்ட் வாழ்க்கைக்கு விடைகொடுத்தார்.
இதேவேளை, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.