சக மாணவரை கொடூரமாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஏழு மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தலா மூன்று இலட்சம் ரூபாய் சரீர பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், ஹோமாகம பொலிஸார் விசாரணை நடத்தி, சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தாக்குதலுக்குள்ளான மாணவன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர், மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Stay in the loop – join us on WhatsApp for the latest updates!