கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்று முன்னறிவிப்பின்றி செயல்பாடுகளை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
நெக்ஸ்ட் மேன்ஃபேக்ச்சரிங் தனியார் நிறுவனமே இவ்வாறு திடீரென மூடப்பட்டது.
இதனால் 1,400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீரென வேலையிழக்க நேரிட்டுள்ளது.
தகவல்களின்படி, தொழிற்சாலை வளாகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தங்களுக்கு எந்த முன்னெச்சரிக்கையோ, விளக்கமோ வழங்கப்படவில்லை என்றும், இழப்பீடு அல்லது மாற்று வேலைவாய்ப்பு குறித்து எந்த தெளிவும் இல்லாமல் பலர் இப்போது தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவர்களாக இருப்பதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.