கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் களுபோவிலவில் அமைந்துள்ள கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், சிறிது நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறந்தவர் தெஹிவளை, ஓர்பன் பிளேஸைச் சேர்ந்த 19 வயதுடையவர்.
இந்த சம்பவம் குறித்து கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.