துமிந்த திசாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு! – Global Tamil News

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (7) அவர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி மே மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!