துவிச்சக்கர வண்டிகளை திருடியவா் ஹெரோயினுடன் கைது

 

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவர்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை.கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரது உடைமையில் இருந்து ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளும், ஆண்கள் பயன்படுத்தும் 5 துவிச்சக்கர வண்டிகளும் , பெண்களின் 11 துவிச்சக்கர வண்டிகளுமாக 16 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் சில மாதங்களாக நல்லூர், யாழ் நகர பகுதி, கே.கே.எஸ்.வீதி போன்ற இடங்களில் தனது கைவரிசையை காட்டி வந்துள்ளார்.  எனவே அப்பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை தொலைத்தவர்கள் இருந்தால் , யாழ்ப்பாணம்  காவல்நிலையத்திற்கு வருகை தந்து தமது துவிச்சக்கர வண்டிகளை அடையாளம் காட்டுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

அதேவேளை , கைது செய்யப்பட்ட நபரை  காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதுடன் , நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!