தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த ஜெயவீர, சில நிமிடங்களுக்கு முன்பு சபாநாயகடாக்டர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து டாக்டர் ஹர்ஷண சூரியப்பெரும ராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜெயவீர நியமிக்கப்பட்டார்.
நிதி அமைச்சின் செயலாளர் பதவியை ஏற்பதற்காக சூரியப்பெரும அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.