சஜித் பிரேமதாசவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கும், அரசாங்கத்துக்கு எதிரான அவரின் குரலை அடக்குவதற்குமே அரசாங்கம் மத்திய கலாசார நிதியத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் அதற்கு முன்னர் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்கள் அரசாங்கத்தை விரட்டியடிக்க வீதிக்கிறங்குவார்கள் என SJB தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.