ஞாயிற்றுக்கிழமை (13) நியூ ஜெர்சியின் மெட்லைஃப் மைதானத்தில் நடந்த பிபா (FIFA) கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் செல்சி அணி பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தப் போட்டியில் செல்சியா அணி அணி வீரர் கோல் பால்மர், முதல் பாதியில் ஒரு அற்புதமான மாஸ்டர் கிளாஸை வழங்கினார்.
பரபரப்பான முதல் பாதியில் பால்மர் இரண்டு கோல்களை அடித்ததுடன், கோல் ஒன்றினை அடிப்பதற்கான உதவியையும் புரிந்தார்.
இதனால், போட்டியின் முடிவில் செல்சி அணி, பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி பிபா கழக உலக கிண்ண சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றது.
மேலதிக விபரம்
இம்முறை கழக அணிகளுக்கான உலக கிண்ண தொடர் பெரும் எதிர்ப்பார்ப்புடன் நடைபெற்றது.
32 அணிகள் கலந்து கொண்ட இத் இதொடரின் இறுதிப்போட்டிக்கு பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் மற்றும் செல்சி அணிகள் தகுதிப்பெற்றன.
போட்டி தொடங்கியதிலிந்தே செல்சி அணியின் ஆதிக்கத்தை பார்க்க முடிந்தது.
போட்டியின் 22 ஆவது நிமிடத்தில் கோல் பால்மர் செல்சி அணியை முன்னிலைப்படுத்தினார்.
1-0 என செல்சி அணி முன்னிலைப்பெற்ற நிலையில் அடுத்த 8வது நிமிடத்தில் மீண்டும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது இரண்டாவது கோலினை பதிவு செய்து அசத்தியமையால் 2-0 என செல்சி அணி முன்னிலைப்பெற்றது.
பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் எடுத்த முயற்சிகள் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் 43வது நிமிடத்தில் ஜோவோ பெட்ரோ செல்சி அணியின் 3வது கோலினை பதிவு செய்தார்.
இதனால் முதல் பாதியிலியே செல்சி அணி 3-0 என முன்னிலைப்பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணியால் ஒரு கோலினை கூட பதிவு செய்ய முடியவில்லை.
இதனிடையே, 85வது நிமிடத்தில் விதி மீறலில் ஈடுப்ட்டமைக்காக பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணியின் ஜோவோ நேவ்ஸ் சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டார்.
இறுதியில் இப்பருவகாலத்திற்கான பிபா கழக மட்ட கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது செல்சி அணி.
வெற்றியாளருக்கான வெற்றிக்கிண்ணத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செல்சி அணிக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.