பிரித்தானிய அரசாங்கம் அதன் குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விசா விண்ணப்பதாரர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் ஆங்கிலத் தேர்வுகளை கடுமையாக்கவும், பிரித்தானியாவில் குடியேற விண்ணப்பிப்பதற்கான கால வரம்பை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் வதிவிட அந்தஸ்தைப் பெறுவதற்கான காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீடிக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன் சர்வதேச மாணவர்களை தோ்வு செய்வதிலும் சில திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது. , அதன்படி பட்டதாரிகள் தங்கள் கற்றலுக்கு பிறகு தங்கியிருக்கும் காலத்தை 18 மாதங்களாக குறைப்பதற்கும் கவனம் செலுத்தியுள்ளது.
அத்துடன் குடியேற்றத்தை நம்பியிருப்பதை விட, தொழிலாளர் சந்தையின் நிலையை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் தொழிலாளர் சந்தையை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை இடம்பெயர்வைக் குறைப்பதனையும் எல்லைக் கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் உத்தியோகப்பூர்வ அரசாங்க வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post பிாித்தானியா குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்குகின்றது appeared first on Global Tamil News.