புதிய பாப்பரசராக தெரிவுசெய்யப்பட்ட பாப்பரசர் லியோ வத்திக்கானில் உள்ள சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று(11) மக்களுக்கு தனது முதல் ஆசீர்வாதத்தையும் உரையையும் வழங்கியுள்ளார்.
புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட பின் தனது முதல் உரையில், கன்னி மரியாளின் நினைவாக, Regina Caeli (ரெஜினா கேலி) என்ற பிரார்த்தனையை அவர் வாசித்தார்.
தனது முதல் ஞாயிற்றுக்கிழமையின் திருப்பலியை ஆற்றிய பின்னர் சென் பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களை பாப்பரசர் லியோ ஆசீர்வதித்துள்ளார்.
இதேவேளை நேற்று (10) , பாப்பரசர் லியோ பசிலிக்காவில் உள்ள மறைந்த முன்னாள் பாப்பரசர் பிரான்சிஸின் கல்லறைக்கு முன் பிரார்த்தனை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரம் மே 18 அன்று சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் திருப்பலியில் பாப்பரசர் லியோ முறையாகப் பதவியேற்கப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.