புதிய போப் தேர்வில் இத்தாலிய கர்தினால் பெச்சியூ விலகல்

வாடிகன் சிட்டி: பு போப் பிரான்சிசின் ஆலோசகராக இருந்தவர் ஏஞ்சலோ பெச்சியூ. அடுத்த போப்புக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்ட இவரை கடந்த 2018ல் கர்தினலாக போப் பிரான்சிஸ் அறிவித்தார். வாடிகனில் முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் 2020ல் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அதில் வாடிகன் குற்றவியல் நீதிமன்றத்தில் இவருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு வரும் 7ம் தேதி புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் மாநாடு தொடங்க இருக்கிறது. இதில் பெச்சியூ பங்கேற்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது முடிவை நேற்று வெளியிட்டுள்ளார். போப் பிரான்சிசின் விருப்பத்திற்கு கீழ்படியும்படி, கர்தினால்கள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என பெச்சியூ அறிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!