பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் உத்தரவுகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இதன்போது, சாரதி மோட்டார் சைக்கிளை நிறுத்தாது வேகமாக முன்னேறியுள்ளார்.

இதனால், மோட்டார் சைக்கிளை பொலிஸார் பின்னால் துரத்திச் சென்றுள்ளனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் ஒரு லொறியொன்றின் மீது மோதி நின்றது.

இதையடுத்து ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.

மற்யை நபர் தப்பித்து ஓடியதால், பொலிஸார் அவரை துரத்திச் சென்றுள்ளனர்.

இதன்போதே, அவரை கைது செய்ய பொலிஸார் அவரின் காலில் துப்பாக்கிப் பிரேயாகம் நடத்தியுள்ளனர்.

காயமடைந்த சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!