மாணவி மரணம்; அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளோம்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பாக தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக தாம்  மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருடன்  கலந்துரையாடியுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி, தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாதப்பிரதிவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இது ஒரு பெண் பிள்ளை சம்பந்தப்பட்ட விவகாரமாகும் எனவும், 15 வயதுடைய மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனவேதனை அடைந்தமையானது முழு சமூகமும் தோல்வியடைந்துள்ளதை  எடுத்துக்காட்டுகின்றது எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த மாணவி கல்வி கற்ற பாடசாலையின் அதிபரிடம் தாம் விளக்கம் கோரியுள்ளதாகவும், .அவர் இது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அறிவித்திருக்க வேண்டும் எனவும், மாணவிகளை பாதுகாப்பதற்கான சிறந்த பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி அமைச்சு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரை சபை மற்றும் பொலிஸாரை உள்ளடக்கியவகையில் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!