மீனவர்களுக்கு எச்சரிக்கை – LNW Tamil




நிலவும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக இன்று முதல் பலத்த மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி முதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு குறித்த பிரதேசங்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



நன்றி

Leave a Reply