ஸ்டாவஞ்சரில் நடந்து வரும் நோர்வே பெண்கள் செஸ் போட்டியில், ஆர்மகெடோன் சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு பெண்கள் உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை( Ju Wenjun )தோற்கடித்து சாதனை படைத்துள்ளார்.
உலக சம்பியனான வென்ஜூனை வைஷாலி தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியின் மூலம் அவருக்கு ஒரு புள்ளி கிடைத்தது. இன்னும் 2 சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், 6 வீராங்கனைகள் கொண்ட பட்டியலில் வைஷாலி 5வது இடத்தில் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே நோர்வே செஸ் போட்டியில் வைஷாலியின் சகோதரர் பிரக்யானந்தா, உலக சாம்பியனான நோர்வேவின் மேக்னஸ் கார்ல்சனை முதல்முறையாக தோற்கடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.