யாழ்ப்பாணத்தில் சுமார் 83 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் கேரள கஞ்சா கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ள நிலையில் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
அதனை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 38 பொதிகளில் பொதியிடப்பட்ட நிலையில் சுமார் 83 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து தப்பிசென்ற சந்தேகநபர்களை கைது செய்ய மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.