0
வட ஆப்ரிக்கா: வட ஆப்ரிக்காவில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை பிரபல யூடியூபர் Mr.Beast தொடங்கி உள்ளார். ஆப்பிரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் நல்லெண்ணம் கொண்ட வெளிநாட்டினரின் வரிசையில் Mr.Beast சேர்ந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டில் இவர் 100 நீர் கிணறுகளைக் கட்டி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், இவர் மேற்கு ஆப்பிரிக்காவில் கோகோ பண்ணைகளுக்கு பணிக்கு செல்லும் குழந்தை தொழிலாளர்களை மீட்பதற்காக, பள்ளிகளில் இலவச காலை உணவுத்திட்டத்தை பிரபல யூ-ட்யூபர் Mr Beast அறிமுகம் செய்துள்ளார்.
இதன்மூலம் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு பள்ளியில் முதல் வாரத்திலேயே 10% அதிகரித்துள்ளதாக ஆச்சர்யம் பொங்க தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு வருடத்தில் இன்னும் முன்னேற்றமடைந்து இத்திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும், 15,00,000 குழந்தை தொழிலாளர்களை மீட்க யோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.