வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி அறிவித்தல் – சுமந்திரனின் விசேட கோரிக்கை

 

வடக்கில் சுமார் ஐந்தாயிரத்து 941 ஏக்கர் காணிகளை அபகரிக்கும் நோக்கில் அரசாங்கம் வர்த்தமானி ஒன்றை  வெளியிட்டமை தொடர்பாக  இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த  வர்த்தமானிக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய    நடவடிக்கைகள் தொடர்பாக எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினரால்   முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப்பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இல்லத்தில் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது .

மேலும் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆட்சிசெய்துவந்த நிலங்களை ஒரு நொடியில் அரசநிலங்களாக மாற்றுவதற்குரிய செயற்பாடே இந்த வர்த்தமானி அறிவித்தலாகும் எனவும்  இந்த  வா்த்தமானி  அறிவித்தலின் மூலம் ஆக்கிரமிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இடங்களில் காணிகளிள் உாிமையாளா்களான  தமிழ் மக்கள் உடனடியாக தமதுகாணிகளுக்கு உரிமை கோரவேண்டும் எனவும்  எம்.ஏ.சுமந்திரன்  வலியுறுத்தியுள்ளாா்.

குறித்த பகுதிகளில் காணிகள் உள்ளவர்கள் புலம்பெயர்ந்திருப்பின் உடனடியாக வெளிநாடுகளிலிருந்து வருகைதந்து அக்காணிகளை உரிமைகோரவேண்டும் எனவும் அவ்வாறு  வருகை தருவது கடினமாக இருப்பின்,  அந்த காணி உரிமையை இங்குள்ள உறவினர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையினை  மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!