விவோ T4 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | vivo t4 lite smartphone launched in india price features

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி4 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி4 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ல் டி1 மாடல் அறிமுகமானது. தொடர்ந்து டி2 மற்றும் டி3 மாடல்களின் வேரியன்ட்கள் அறிமுகமாகின. தற்போது டி4 மாடலில் ஒரு வேரியன்டான டி4 லைட் அறிமுகமாகி உள்ளது. அண்மையில் டி4 அல்ட்ரா மாடல் ஸ்மார்ட்போன் வெளியானது. விவோ டி4 லைட் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.74 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 6,000mAh பேட்டரி
  • 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம்
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • தூசி, தண்ணீரைத் தாங்கும் வகையில் இந்த போனுக்கு ஐபி64 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது
  • 4ஜிபி, 6ஜிபி, 8ஜிபி என மூன்று ரேம் வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
  • இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது இந்த போன்
  • இந்த போனின் விலை ரூ.13,999 முதல் தொடங்குகிறது

நன்றி

Leave a Reply

error: Content is protected !!