இன்றைய முஸ்லிம்கள் முறையற்ற உணவுப் பழக்கம் கொண்டவர்கள்?

உணவு
(நிலாவௌி – Mohamed Nawshath Ferose)
01. முஸ்லிம்களைப் போல உணவுக்காக அதிகம் செலவளிப்பவர்கள் வேறு யாருமில்லை என்பது பெருமையாக சொல்லிக்கொள்வது வழக்கம்

02. முஸ்லிம்களின் பிழையான உணவுப் பழக்கம் ஏற்படுத்தியுள்ள பாதகமான விளைவுகளை நாம் மறைப்பதும் கருத்திற் கொள்ள மறப்பதும் மிகப் பெரும் குற்றமாகும்.

03. அல்லாஹ் ஹலால் ஆக்கியவை அனைத்தும் ஹலால் என்று சொல்லும் நாம் உணவு உற்கொள்ளும் பழக்கத்தில் பாரிய தவறுகளைச் செய்கின்றோம்.

04. தொற்றும் தொற்றா நோய்கள் பற்றி தெளிவற்ற நிலை காரணமாக எமது உணவுப் பழக்கம் எமது பரம்பரையைக் கூட அழித்து வருகின்றமையை உணர மறுக்கின்றோம்.

05. ஒற்றுமையாக உண்ண வேண்டும் என்று கூட்டமாக சேர்ந்து சஹன்களையும் அண்டாக்களையும் காலியாக்கிவிடுகின்றோம். ஆனாலும், குடும்ப அங்கத்தவர்களை ஒருவர் பின் ஒருவராக திடீர் மரணங்கள் பிடித்துக் கொள்ளும் போது காரணமறியாது தவிக்கின்றோம்.

வீண் பெருமை வேண்டாம் சகோதரர்களே!

கால் மூட்டுத் தேய்மானம் காரணமாக அறுவை சிகிச்சைக்குள்ளாகும் நிலைக்கு எனது உடல் நிலை வந்தடைக்கின்றது.

அல்லாஹ்வின் அருளை இழந்து பெரும் மன வேதனை அடைகிறேன். இதற்கு பிரதான காரணங்களாக பிழையான உணவுப் பழக்கமும் உடற் பயிற்சியின்மையும் அமைகின்றன.

குறிப்பாக, முஸ்லிம் பெண்கள் மற்றும் பாரிய உடல் உழைப்புச் செய்யாத ஆனாலும் மூளை களைப்புறும் வகையிலான கல்வி மற்றும் நிர்வாகம் சார் வேலைகள் செய்பவர்கள், வியாபார நிலையங்களின் முதலாளிகள் அனைவரும் இவ் விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.

எமது உடல் ஆரோக்கியம் பேணுதல் ஒரு வணக்கமாகும்!

 

Leave a Reply