மஸ்ஜிதில் தடுக்கப்பட்டவை
- மஸ்ஜிதுகளில் வியாபாரம் செய்வது, காணாமல் போன பொருளை தேடுவது.
- மஸ்ஜிதுகளை நடைபாதைகளாக பயன் படுத்துவது.
- குற்றத்திற்குரிய தண்டனைகளை பள்ளிக்குள் நிறைவேற்றுவது.
- மஸ்ஜிதில் அதான் சொன்ன பின்பு அவசியமின்றி தொழுகாமல் வெளியேறுவது.
- மஸ்ஜிதில் நுழைந்தபின் நேரமிருப்பின் இரண்டு ரகஅத் தொழாமல் உட்காருவது.
- தொழுகைக்கு செல்லும்போது அவசரமாக ஓடுவது. அவசர
- மஸ்ஜிதில் அவசியமின்றி இரு தூண்களுக்கு மத்தியில் வரிசைகளை அமைப்பது.
- பூண்டு, வெங்காயம் போன்ற அருவருப்பான வாடை உள்ளவற்றை (பச்சையாக) சாப்பிட்ட பின் மஸ்ஜிதுக்குள் நுழைவது.
- பிற முஸ்லிம்களுக்கு இடையூறு தருபவற்றை எடுத்துக் கொண்டு மஸ்ஜிதுக்குள் நடப்பது.
- ஷரீஅத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு பெண்கள் மஸ்ஜிதுக்குச் செல்வதை தடுப்பது.
- பெண்கள் மஸ்ஜிதுக்குச் செல்லும்போது வாசனை பொருள்களைப் பயன்படுத்துவது.
- மஸ்ஜிதில் இஃதிகாஃப் இருக்கும் நாள்களில் மனைவியுடன் கூடுவது.
- மஸ்ஜிதுகளை போட்டிக்காகவும், பெருமைக் காகவும் கட்டுவது.
- சிகப்பு நிறத்தைக் கொண்டோ அல்லது மஞ்சள் நிறத்தை கொண்டோ மஸ்ஜிதுகளை அலங்கரிப்பது.
- தொழுபவரின் சிந்தனையை திருப்பும் அளவுக்கு மஸ்ஜிதுகளில் அலங்கார வேலைப்பாடுகள் செய்வது.
ஜனாஸாவில் தடுக்கப்பட்டவை
- கப்ருகளை கற்களைக் கொண்டு கட்டுவது.
- அதைச் சுற்றிலும் மதில் கட்டுவது அல்லது மற்ற கப்ருகளைவிட உயர்த்துவது.
- கப்ருகளின் மேல் உட்காருவது.
- செருப்புகளை அணிந்து கப்ருகளுக்கு மத்தியில் நடப்பது.
- கப்ருகளில் அடக்கம் செய்யப்பட்டவரின் பெயரை எழுதுவது.
- கப்ருகளைத் தோண்டுவது.
- கப்ருகளை பள்ளிவாயிலாக மாற்றுவது.
- ஜனாஸா தொழுகையைத் தவிர மற்ற தொழுகைகளை கப்ருகளுக்கு அருகில் தொழுதல்.
- இறந்தவருக்காக மூன்று நாள்களுக்கு அதிகமாக துக்கம் கடைப்பிடிப்பது. (ஆனால் கணவன் இறந்துவிட்டால் பெண் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டும்.)
- கணவன் இறந்துவிட்ட பெண் (இத்தா காலம் வரை) நறுமணம், சுர்மா, மருதாணி, நகைகள், அலங்காரமான ஆடைகளைப் பயன்படுத்துவது.
- ஒப்பாரி வைப்பது. ஒப்பாரி வைக்கத் தூண்டுவது.
- அதற்காக இறந்தவர் வீட்டில் ஒன்று கூடுவது.
- ஒப்பாரி வைக்கும் பெண்ணை கூலிக்கு அமர்த்துவது.
- கன்னத்தில் அறைந்து கொள்வது.
- தலைமுடியை அவிழ்த்துக் கொள்வது, விரித்துப் போட்டுக் கொள்வது.
- காஃபிர்கள் முறையில் இறப்பு செய்தி அறிவிப்பது. (உதாரணமாக: துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், ஊரெங்கும் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவிப்பது. அவ்வாறின்றி, பொதுவாக செய்வது கூடும்.)
- அறிவிப்புஇரங்கல் கூட்டங்கள் நடத்துவது.
(جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا)