வரலாற்றில் இன்று – வரலாற்றில் இன்றைய திகதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள், பிறப்பு மற்றும் இறப்புகள்
குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்
1198 – செவில்லில் உள்ள அல்மொஹத் பள்ளிவாசலுக்காக கட்டிடக் கலைஞர் பென் அகமது வடிவமைத்த கிரால்டா மினாரெட் கட்டி முடிக்கப்பட்டது.
1624 – இங்கிலாந்து ஸ்பெயின் மீது போரை அறிவித்தது
1862 – ஐக்கிய அமெரிக்கா முதலாவது காகிதப் பணத்தை $5, $10, $20, $50, $100, $500 மற்றும் $1000 நோட்டுகளாக வெளியிட்டது
1876 – முதல் தொலைபேசி அழைப்பு; அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தனது உதவியாளர் தாமஸ் வாட்சனிடம் “மிஸ்டர் வாட்சன், இங்கே வாருங்கள், நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறுகிறார்
1902 – தாமஸ் ஆல்வா எடிசன் மூவி காமிராவைக் கண்டுபிடிக்கவில்லை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது
1945 – இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற மிக மோசமான வான்வழித் தாக்குதலில் டோக்கியோவில் இரவு நேர பி-29 குண்டுவீச்சுக்களில் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
1969 – மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கொலைக் குற்றத்தை ஜேம்ஸ் ஏர்ல் ரே ஒப்புக்கொண்டார்.
1982 – அமெரிக்க அதிபர் ரீகன் லிபியா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தார்
2012 – காசாவில் இருந்து ஆக்கிரமிப்பு இஸ்ரேல் பகுதிகள் மீது 130 ராக்கெட்டுகள் ஏவப்பட்டன
2020 – ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபை விளாடிமிர் புட்டின் வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக பதவியில் இருக்க அனுமதிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது.