ஸ்மாட் நபர்கள் செய்யாத 6 விடயங்கள்

ஸ்மாட் நபர்கள் செய்யாத 6 விடயங்கள்

உலகில் எத்தனையோ ஸ்மாட் அறிவாளிகளும் பணக்காரர்களும் இருந்திருக்கிறார்கள்.
அதே போல் பலர் அத்தகைய நபராக இருப்பதற்கு விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் தான் என்ன? அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
1. அநாவசியமான செலவுகள் செய்ய மாட்டார்கள்

பணத் திட்டமிடல் அறிவு என்பது மிகவும் இன்றியமையாத ஒரு அறிவாகும். இதை கஞ்சத்தனத்துடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. அநாவசியமான செலவுகளை தவிர்து நீங்கள் கஷ்டத்துடன் சம்பாதிக்கும் பணத்தை பாதுகாத்துக் கொள்வது சிறந்த பண்பாகும்.

‘சிறு துளி பெரு வௌ்ளம்’ என்பது போல் சிறு சிறு செலவுகள் சேர்ந்து தான் பெரும் பண இழப்புகள் ஏற்படுகின்றது. முதலில் ஒரு ரூபாயில் ஆரம்பித்தாலும் படிப்படியாக அது பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், நூறாயிரமாக மாறுகிறது.

எடுத்துகாட்டாக, குடிநீர் பாட்டில்களை வாங்குவதற்குப் பதிலாக, ஒரு நீர் வடிகட்டியை வாங்கி, வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரை குடித்தல், வங்கி அட்டையைப் பயன்படுத்தி பல முறை பணம் எடுப்பதற்குப் பதிலாக, கவனமாக முடிவு செய்து தேவையான தொகையை ஒரே முறையில் எடுத்துக் கொள்ளுதல்.

இதனால் பணம் எடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைத்து சேமிப்பை அதிகரித்துக் கொள்வது போண்ற புத்திசாலித்தனமான முடிவுளை சுட்டிக்காட்டலாம்.

வரவு செலவு சம்பந்தமான மொபைல் செயழிகள் போன்றவற்றபை் பயன்படுத்தி மாதாந்த செலவுகள் பற்றி அவதானத்துடன் இருப்பது நம்மை அறியாமல், அல்லது அநாவசியமான செலவுகளைக் குறைக்க உதவும்.

2. பிறரை நம்பி அவர்களை சார்ந்து ஸ்மாட் நபர்கள் இருக்கமாட்டார்கள்

நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது சக ஊழியர்களை நம்புவது தவறல்ல. அனைவருக்கும் தமக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ள மற்றவர்களை நாட வேண்டியுள்ளது.

ஆனால் ஒருவரை அதிகமாக நம்புவது அனைத்திலும் மற்றவர்களை நம்பி அவர்களை சார்ந்திருப்பது உங்களை பலவீனமானவராக மாற்றுகின்னது. ஒரு ஸ்மாட் நபராக நீங்கள் ஒரு போதும் வியாபார பண்டமாக மாறக்கூடாது.

3. ஸ்மாட் நபர்கள் பொருப்புள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்

நீங்கள் உங்களது வேலைகள், செயல்பபாடுகள் அனைத்தையும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, சீரான முறையில் செய்ய வேண்டும்.

நீங்கள் செய்யும் செயலுக்கு எப்பொழுதும் மற்றவர் மீது விரலை நீட்டாமல், தவறுகள் ஏற்படின் அது என்னால் ஏற்பட்ட தவறு என்று ஒப்புக்கொள்வது ஒரு பொறுப்பான நபரின் பண்பாகும்.

உதாரணமாக, உங்களுக்கு ஒரு கணக்கு பிழையானால், அது ஆசிரியர் கற்பித்த விதத்தால் நடந்தது என்று நியாயப்படுத்துவதற்குப் பதிலாக, நீங்கள் அவதானத்துடன் அந்த கணக்கை செய்யாததால் தவறு ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், சரியாக செய்த கண்கொன்றை ஆசிரியர் பிழை எனக் குறிப்பிட்டால், அது ஆசிரியரின் தவறு அல்ல, ஒரு வேளை அது தனது எழுத்து தௌிவின்மையால் பிழை என குறிப்பிட்டிருக்கலாம் என சிந்தித்து அதன்பால் அவதானத்தை செலுத்துவது சிறப்பானதாகும்.

ஆனால் இதை தேவையில்லாமல் அனைத்திற்கும் தன்னைத் தானே குற்றம் சொல்லிக் கொள்ளும் மனநிலைக்கு மாற்றிக் கொள்ளக்கூடாது.

இங்கு புரிந்து கொள்ள வேண்டியது நாம் ஒருவரை நோக்கி ஒரு விரலை நீட்டும்போது மற்ற நான்கு விரல்களும் நம்மை நோக்கியே இருக்கும் என்பதாகும்.

4. வாழ்கையின் நிர்வகிப்பை கடந்த காலத்திற்கு பாரம் சாட்டாமலிருத்தல்

கடந்த காலத்தை அழிக்க முடியாது, அது மீண்டும் வராது, அது அப்படியே இருக்கும். அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் அது நமது எதிர்கால முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் வாய்ப்புகளை குறைப்பது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நிகழ்காலம் என்பது ஒரு பரிசு. கடந்த காலத்தைப் பற்றியோ மாற்ற முடியாத எதிர்காலத்தைப் பற்றியோ சிந்தித்து நேரத்தைச் செலவழிப்பதை விட நிகழ்காலத்தை சரியான முறையில் செலவிட்டால், எதிர்காலத்தை மாற்ற உங்களுக்கு காலத்தை மாற்றும் நேர இயந்திரம் தேவையில்லை.

அதை தற்பொழுதே செய்யலாம், எப்போதும் நிகழ்காலம் கடந்து தான் எதிர்காலம் உருவாகின்றது. நிகழ்காலத்தைப் பற்றி நாம் அவதானுத்துடன் இருக்காவிட்டால் எம்மை விட்டு அனைத்தும் கைவிட்டுப் போகும். பின்னர் கைவிட்டுப் போன இறந்த காலத்தை நினைத்து எதிர்காலத்தில் கைசேதப்பட வேண்டி வரும்.

5. ஸ்மாட் நபர்கள் மற்றவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என தனது கருத்துக்களை விட்டு விடமாட்டார்கள்

நாம் எதாவது புதிதாக செய்ய முற்படும் போது அதற்கு வித விதமான அறிவுறைகளை வழங்க ஏறாளமானோர் வரிசையில் நிற்கின்றனர். இதன் காரணமாகவே “கழுதையும் மகனும் தந்தையும்” என்ற கதையை நமக்கு சிறு வயதிலேயே கற்பிக்கப்படுகிறது.

எல்லோரும் சொல்வதைச் செய்யப் போனால், நாம் விரும்பியதைச் ஒரு நாளும் சரியாகச் செய்யவே முடியாது. ஆலோசனை பெறுவது நல்ல விடயம் தான் ஆனால், எல்லாரும் சொல்வதைக் கேட்டு, அவர்கள் சொல்வதையெல்லாம் செய்தானால், உங்களால் எதையும் சரியாகச் செய்ய முடியாது.

வலுக்கட்டாயமாக அறிவுரை கூறும் உறவினர்கள் இருந்தால், அவர்கள் சொல்வதைக் கேட்டு புன்முறுவலுடன் “ஹா” என்று கூறினால் போதும். அது சரி என்று நீங்கள் உணர்ந்தால் அல்லது உங்களின் தேடலின் படி எது சரி என்பதை அறிந்து நீங்கள் செய்யுங்கள்.

“நான் ஒரு வலைத்தளத்தை உருவாக்க போகிறேன், நான் அதில் எதையும் பகிர போவதில்லை. இதைப் பயன்படுத்துபவர்கள் பலதரப்பட்ட விடயங்களை பகிர்ந்துகொண்டு எனது இணையதளத்தை விளம்பரப்படுத்துவார்கள்.

அவர்கள் அதைச் செய்யும்போது எனக்கு பண் கிடைக்கும். இப்படி ஒருவர் உங்களிடம் கூறினால் நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள்? “பைத்தியமா? எதுவும் செய்யாமல் பணம் சம்பாதிக்க முடியாது.” இப்படி இலங்கையின் திமிர்சாலி மக்களிடம் அறிவுரை கேட்காததால் தான் மார்க் ஜூக்கர்பெர்கால் Facebook உருவாக்கப்பட்டது.

6. ஸ்மாட் நபர்கள் தமது திறன்களை மிகைப்படுத்திக் கொள்ளமாட்டார்கள்

ஒருவருக்கு சுயமரியாதை இருக்க வேண்டும். அது தவறான செயல்களைச் செய்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது மற்றும் அவர்களின் குணத்தை உயர்த்திக் கொள்ள உதவுகிறது.

மூன்று விஷயங்கள் இயற்கையாகவே ஒருவரை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்:

  • ஒருவரின் சொந்தக் கொள்கைகளால் தவறு செய்யாமல் இருப்பது,
  • யாரோ ஒருவர் தவறு என்று சொல்வதால் தவறு செய்யாமல் இருப்பது,
  • மக்கள் கேவலமாக நினைப்பார்கள் என தவறு செய்யாமல் இருப்பது.

இவை உள்ளடங்களாக இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற அச்சத்தில், நாணத்தில் தவறு செய்யாமல் இருப்பது தான் இறை பக்தி என்பர்.

இந்த குணங்கள் என்னிடம் உள்ளன என்பதைத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டு, தாழ்வு மனப்பான்மையை இழந்து, சவால்களை அச்சமின்றி எதிர்கொள்ளத் தயாராகி வருவதைத் தவிர, இவற்றைப் பற்றி சிந்தித்து, இவற்றை நான் ஏற்கனவே பெற்றதாக நினைத்து எதிர்கால வளர்ச்சிக்கான கதவுகளை மூடக்கூடாது.

“என்னால் எதையும் செய்ய முடியும்” என்ற எண்ணம் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் வலிமையைப் பெறுவதற்காகவேயன்றி என்னால் எல்லாம் முடியும் என்ற தலைக்கணத்திற்காக அல்ல. ஸ்மாட் ஆக வாழுங்கள்.

Reezah Jasmin


Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!