சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தை மட்டுப்படுத்துவதன் நன்மைகள்!பேஸ்புக் இல்லாத உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
உண்மையில் தொண்ணூறுகளுக்கு முன் பிறந்தவர்களுக்கு பேஸ்புக் அல்லது வேறு எந்த சமூக ஊடகமும் இல்லாத ஒரு உலகத்தை பற்றி சற்றேனும் கற்பனை செய்து பார்க்க முடியும்.
ஆனால் மற்றவர்களுக்கு, பேஸ்புக், ட்விட்டர், டிக்டாக் மற்றும் இன்ஸ்டா இல்லாத உலகம் என்பது பாழடைந்த ஒரு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதைப் போன்று இருக்கும், இல்லையா?
அந்தளவிற்கு இந்த நாட்களில் நாம் அனைவரும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிவிட்டோம் அல்லவா? சுருக்கமாகச் சொன்னால், என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை நாம் பேஸ்புக்கைப் பார்க்கின்றோம்?
நமது நண்பர்களின் நட்பு தொடர்பு கூட இருப்பது பேஸ்புக், ட்விட்டரில் இல்லையா?
ஆனால், இந்த சமூக ஊடகங்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய எதிர்மறையான பாதகமான விளைவுகளை தான் நாம் அறியாத, சிந்திக்காத விடயமாக காணப்படுகின்றது.
உண்மையில், சாதாரனமாக சமூக ஊடக கணக்குகளை வைத்திருக்கும் ஒருவர் சமூக ஊடகங்களை ஒரு நாளைக்கு அளவுக்கதிமாக பயன்படுத்துகிறார் என்று கூறலாம். அதனால் தான் சமூக ஊடகங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பெறக் கூடிய நல்ல முடிவுகள் நன்மைகள் என்ன என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.
01. நேரத்தை மிச்சப்படுத்தலாம்
நீங்கள் பேஸ்புக், யூடியுப் அல்லது ஏனைய சமூக ஊடகங்களில் செலவழிக்கும் நேரத்தை ஒரு புத்தகத்தில் எழுதுங்கள். அதன் பிறகு, இரவில் அதனை கணக்கிட்டுப் பாருங்கள்.
அவ்வப்போது ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்கள் என குறிப்பிட்ட சமூக ஊடகங்களை அன்றைய தினம் பயன்படுத்திய மொத்த நேரத்தை அப்போது கணக்கிட்டுப் பார்கலாம்.
மொத்தத்தில், நாங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரங்களை Facebook அல்லது பிற சமூக ஊடகங்களில் செலவிடுகிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சிலருக்கு இந்த நேரம் மூன்று நான்கு மணித்தியலாத்திற்கு அதிகமாவும் இருக்கலாம். ஏன் நாள் முழுதும் சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பவர்களும் இல்லாமல் இல்லை.
சரி, தொடர்ந்து வேலைளை செய்து கொண்டிருக்க முடியாது தான், சற்று ஓய்வும் தேவை. ஆனால் பேஸ்புக் அல்லது சமூக ஊடகங்க என்பது நாம் ஓய்வெடுக்கும், அல்லது ஓய்வு கிடைக்கும் இடம் இல்லையே!
அதனால் தான் வேலையின் போது நிஜமாகவே சற்று ஓய்வு எடுத்தால் நமது வேலைகளை மீண்டும் திறமையாக செய்ய முடியும். இருப்பினும், சமூக ஊடகங்களின் பயன்பாட்டைக் குறைத்தால், நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
02. பப்ளிக்கான பப்ளிஷிடி வாழ்க்கை
இது சற்று தனிப்பட்ட விஷயம். சிலர் காதல் செய்வதும் ரொமன்ஸ் பண்னுவதும் பொது வௌியில் (Public Wall) தான்.
வீட்டிற்க்கு எடுக்க வேண்டிய பொருட்களின் பட்டியலும் பப்ளிக் கமண்டில் காணப்படும், கோபதாபம், சண்டை சச்சரவுகளும் பப்ளிக் கமண்டில் காணப்படும். எல்லாவற்றுக்கும் மேல் குட் நைட் சொல்லிக் கொள்வதும் கமண்டில் தான். இவர்களுக் (Privacy) என்பது சற்றும் கிடையாது. அவர்களின் வாழ்கை அனைவரும் பார்ககக் கூடியவாறு திறந்த வௌியில் கிடப்பதைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் கிடையாது.
ஆனால் ஒருவரின் வாழ்க்கையை இவ்வாறு பொதுப்படையாக்குவதில் பல குழப்பங்கள் பிரச்சினைகள் உள்ளன. அதில் ஒன்று தான் உங்கள் தனிப்பட்ட தகவல்களை தேவையற்றவர்களின் கைகளில் சேர்ப்பது.
எனவே சமூக வலைதளங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கையில் பொதுத் தொல்லைகளில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
03. அவதானத்தை இழத்தல்!
சமூக ஊடகம் என்பது எளிதில் ஒருவருவரின் அவதானத்தை இழக்கச் செய்யும் ஒரு இடமாகும்.
ஒரு நிமிடம் பேஸ்புக் பார்து விட்டு வரலாம் என்று நினைத்துக் கொண்டு பேஸ்புக் ஆப்பை ஓபன் செய்பவருக்கு நிஜமாகவே ஒரு நிமிடத்திற்குள் தன் பேஸ்புக் நியூஸ் ஃபீடில் என்ன நடக்கிறது என்று பார்த்து முடிக்கும் திறன் இருக்கிறதா?
உண்மையில் நடப்பது என்னவென்றால் ஒரு நிமிடம் பேஸ்புக்கிற்கு செல்பவருக்கு அரை மணி நேரத்திற்கு மேல் அதில் நேரத்தை உணராமல் இருப்பது தான் நடக்கிறது. அங்கு எதிலாவது அரட்டையில் சிக்கினால் நேரம், வேலைகள் எல்லாவற்றையும் மறந்து பேஸ்புக்கில் மூழ்கி விடுவார்கள்.
அப்புறம் முக்கிய வேலைளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதும் மனதில் ஓடுவது யார் கமண்ட்ஸ் பண்ணியிருப்பார்கள், எத்தனை நபர்கள் கமண்ட்ஸ் பண்ணியிருப்பார்கள் என்பது தான். இதனால் தமது வேலைகளையும் மன நிம்மதியுடன் செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது.
அதே போல் தான், ‘எங்களுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் வேண்டாம்’ என்று சொல்லிக் கொள்பவர்களும், பேஸ்புக்கில் எதையாவது போட்ட பிறகு மீண்டும் மீண்டும் லாக்-இன் செய்து எத்தனை லைக்ஸ் கமெண்டுஸ் வந்துள்ளது என பார்க்கின்றனர்!
04. உண்மையில் சோஷியில் இல்லை
முன்பு, எமக்கு அடிக்கடி சந்திக்கும் நண்பர்கள் இருக்கவில்லை. ஆனால் நண்பர்கள் இருந்தனர். அவர்கள் நெடுங்காலமாக நட்புடன் இருந்து பழகி, தாம் உண்மையான நண்பர்களாக இருப்பதை உறுதி செய்தவர்கள்.
ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. இப்போது இருப்பது முகநூல் நண்பர்கள். ஒரு போதும் அவர்களை கண்டதுமில்லை, பழகியதுமில்லை என்பதால் அவர்கள் உண்மையானவர்களா என்பது கூட நமக்கு தெரியவில்லை.
நாம் ஒருவரையொருவர் ஆன்லைனில் அடிக்கடி சந்தித்தாலும், நாள் முழுவதும் அரட்டை அடித்தாலும், இவை சமூக வலையத்தளங்களின் நன்மைகள் என்று கூறினாளும் நிஜ உலகில் நாம் சந்திப்பது போன்ற தீவிரமான நட்புப் பொருத்தம் அரிதாகவே காணப்படுகின்றது.
இவ்வாறு ஓன்லைனில் அறியாத தெரியாத நபர்களுடன் நட்பு என்று கூறிக் கொண்டு அரட்டை அடித்தாலும் அது உண்மையில் சோஷியல் லய்ப் (சமூக வாழ்க்கை) என்று கூற முடியுமா? இது சமூக வாழ்க்கை அல்ல, தனிமை வாழ்க்கை!
05. என் வாழ்க்கை அவரைப் போல் இல்லையே!
உங்கள் நண்பர்களின் முகநூல் பதிவுகளைப் பார்த்த பிறகு நீங்கள் இப்படி உணர்ந்தீர்களா? டான் பில்செரியனின் இன்ஸ்டாகிராம் பதிவுகளைப் பார்த்த பிறகு நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? அப்படியெனில், இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.
இந்நாட்டில் பலதரப்பட்ட பணம் உள்ளவர்களும், விதவிதமாக வாழ்பவர்களும், வெவ்வேறு அளவுகளில் படித்தவர்களும், வித்தியாசமான மனிதர்களும் இருக்கலாம்.
ஆனால் எந்த பிரச்சனைகளும் இல்லாத, தங்கள் முழு வாழ்க்கையையும் பேஸ்புக்கில் காண்பிக்கும் ஜாலியான வாழ்கை வாழும் நபர்கள் எங்கும் இல்லை.
உண்மையில் சமூக ஊடகங்களால் நிகழக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால், சமூக ஊடகங்களில் நீங்கள் பார்க்கும் மற்றவர்களின் வாழ்க்கையுடன் உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டு வருத்தப்படுவது.
சமூக வலைத்தளங்களில் காண்பது வாழ்க்கை அல்ல, காட்சிப்படுத்தல்கள் மட்டுமே என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியாது!
06. நிஜ வாழ்க்கையிலிருந்து மாறுபட்ட நபர்கள்
சமூக ஊடகங்களில் முற்றிலும் மாறுபட்ட நபர்களைப் போல வித்தியாசமான முறையில் நடந்துகொள்பவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
அதாவது நிஜ உலகில் நேருக்கு நேர் முகத்தை கூட பார்து பேச முடியாதவர்கள் சமூக வலைதளங்களில் அடாவடியான சீன் காட்டிக் கொண்டிருப்பார்கள்.
அது ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் சமூக ஊடகங்களில் தனது முழு வாழ்க்கையையும் படிப்படியாக நிலை நிறுத்திக் கொண்ட ஒருவருக்கு, தனது நிஜ வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை தீர்க்க, முகம் கொடுக்க முடியாது. எப்போதும் அடையாள நெருக்கடியுடன் தான் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
07. தேவையற்றதை ஒதுக்கி வைக்கலாம்
பொதுவாக, காதல் முறிந்தால், கடினமான கவலையான காலம் வரும் அல்லவா. அந்த கடினமான காலங்களில் செய்யக்கூடிய ஒன்று, உடைந்த உறவில் உள்ள மற்ற தரப்பினருடனான தொடர்பை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நிறுத்துவதாகும். ஏனென்றால், அடிக்கடி காணும் போது மிகவும் கவலை வரும் என்பதால் தான்.
ஆனால் பேஸ்புக்கில் இதை செய்ய முடியாது, வேண்டும் என்றால் Block பண்ண முடியும் தான்.
எனினும் பெரும்பாலும் நடப்பது திருட்டு கண்கொண்றாவது உருவாக்கிச் சென்று அந்த பக்கம் என்ன நடக்கின்றது என்பதை திருட்டு தனமாக பார்த்து விட்டு வரத் தோன்றும்.
இது சில நேரம் மன நோயாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. சமூக வலையத்தள்களை பாவிக்கும் போது இது போண்ற கவலை அளிக்கக்கூடிய, தேவையற்ற விடயங்களை காலத்தை நேரத்தை விரயமாக்கிக் கொண்டு ஈடுபடாமல் இருப்பது மனதிற்கும் நிம்மதியாக இருக்கும்.
சமூக ஊடகங்களை மட்டுப்படுத்திக் கொள்வதால் பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகள் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டோம், அடுத்து நாம் சமூக ஊடகங்களின் பாவனையை எப்படி மட்டுப்படுத்திக் கொள்வது என்பதை பார்க்க வேண்டும்..
By – Safrina Arshad
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!
Excellent…