D.P. விஜேதுங்க – நிறைவேற்று அதிகாரமிக்க இலங்கையின் 3வது ஜனாதிபதி

D.P. விஜேதுங்க(D.P. விஜேதுங்க) டிங்கிகிரி பண்டா விஜேதுங்க (15 பெப்ரவரி 1916 – 21 செப்டம்பர் 2008)

விஜேதுங்க முதியன்சேலாவின் தெல்கஹாபிட்டிய ஆராச்சில்லா மற்றும் அவரது மனைவி மணம்பேரி முதியன்சேலா பலிகுமனிகே மனம்பேரி ஆகியோருக்கு 1916 பெப்ரவரி மாதம் 15 திகதி மூத்த பிள்ளையாக டிங்கிகிரி பண்டா விஜேதுங்க பிறந்தார்கள்.

உடுநுவர, பொல்கஹ அங்க கிராமத்தில் பிறந்த அவர், கம்பளை புனித ஆண்ட்ரூ கல்லூரியில் தனது கல்வியை முடித்து கூட்டுறவு பரிசோதகராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.

மலையகத்தின் கௌரவ அமைச்சரான திரு. ஏ. ரத்நாயக்கவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்று D. B. திரு.விஜேதுங்க அவர்கள் அரசியல் அரங்கில் பிரவேசித்தார்.

ஜோர்ஜ் ஈ. டி. சில்வா, ஏ. ரத்நாயக்க போன்ற அரசியல் தலைவர்களுடன் டி.பி. விஜேதுங்க நெருக்கமாக பழகினார்.

டி.எஸ்.சேனநாயக்க அவர்களின் அமைச்சரவையில் உணவு மற்றும் கூட்டுறவு சேவைகள் அமைச்சராக இருந்த ஏ. ரத்நாயக்க டி.பி. விஜயதுங்க அவரது அந்தரங்கச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1946 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து 1965 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் உடுநுவர தொகுதியில் போட்டியிட்டு அரசியல்வாதியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

1977 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் J.R. ஜெயவர்தன அரசாங்கத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக சேவையாற்றினார். அவர் மின்சாரம் மற்றும் எரிசக்தி, விவசாயம், தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

1988 ஆம் ஆண்டில் மாகாண சபை முறை நிறுவப்பட்ட பின்னர் வடமேல் மாகாண ஆளுநராக கடமையாற்றிய விஜயதுங்க அவர்கள் பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் மீண்டும் பாராளுமன்ற அரசியலுக்குத் திரும்பினார்.

1989 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் அவர் பிரதமராக பதவியறே்றார். இவர் இலங்கையின் 12 வது பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்தார்.

1993 மே 1 அன்று நடைபெற்ற மே மாத பேரணியில் நடந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் படுகொலையைத் தொடர்ந்து, திரு.விஜயதுங்க அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியாகும் வாய்ப்பைப் பெற்றார்.

விஜேதுங்கவின் சகாப்தம் இந்த நாட்டில் ஜனநாயகம் செயற்பட்ட அமைதியான காலகட்டம் எனக் கூறலாம்.

அவரது காலத்தில், இனம் தெரியாத துப்பாக்கிதாரிகள் வந்து கதவைத் தட்டவில்லை. அதனால், அப்போது மனித உயிர் சேதம் ஏற்படவில்லை.

அவரது காலத்தில் தான் ஊழல் மற்றும் அராஜகம் ஏதும் இல்லாத தேர்தல் நடைபெற்றது.

அதனால் தான் 1993 இல் மாகாண சபைத் தேர்தலையும், 1994 இல் தென் மாகாண சபைத் தேர்தலையும், 1994 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலையும் ஊழல் இன்றி அமைதியாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு அவரால் முடிந்தது.

அத்துடன் அவரது காலத்தில் நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதையும் விட வலுவாக இருந்தது. பங்குச் சந்தை மற்றும் நிலங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது.

நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியாக சுமார் ஒரு வருட காலம் D. B. திரு.விஜயதுங்க மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார்.

உண்மையான மக்கள் தலைவராக மக்களின் இதயங்களில் நிலைத்திருந்த திரு.விஜேதுங்க ஜனநாயகப் பண்புகள் நிறைந்தவர்.

1994 ஆம் ஆண்டில் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு பெற்று பிலிமதலாவையில் உள்ள தனது இல்லத்தில் தனது கடைசி காலத்தை கழித்தார்,

தனது பதவிக் காலத்திலும் அரசியலில் இருந்து விலகி இருந்த காலத்திலும் மக்கள் நலனுக்காவவே செயல்பட்டார்.

நீண்டகால சுகயீனம் காரணமாக 2008 செப்டம்பர் 21 ஆம் திகதி கண்டி ஆதார வைத்தியசாலையில் காலமானார்.

தகவல் – sarinigar


Sarinigar Main Logo, About Us, Contact Us, Privacy PolicyTumblr

Leave a Reply

error: Content is protected !!