கணவன் – மனைவி எதிர்பார்ப்புகள் | (Don’t miss it)

கணவன் – மனைவி – எதிர்பார்ப்புகள்
(கணவன் மனைவி ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விடயங்கள்.)

அனைவருக்கும் திருமண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே சந்தோஷமாக குடும்பம் நடத்துவதற்கு ஆசைதான். அது சிலருக்கு எளிதானகவும் பலருக்கு சிரமமானதாகவும் இருக்கின்றது.

  • குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?​
  • கணவன் மற்றும் மனைவியின் எதிர்பார்ப்புகள் என்ன?
  • குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
  • குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களது பங்கு என்ன?
  • வரவு-செலவுகளை வரையறுப்பது எப்படி?

குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?

  1. வருமானம்
  2. ஒத்துழைப்பு
  3. மனித நேயம்
  4. பொழுதுபோக்கு
  5. ரசனை
  6. ஆரோக்கியம்
  7. மனப்பக்குவம்
  8. சேமிப்பு
  9. கூட்டு முயற்சி
  10. குழந்தைகள்

ஒரு கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.

02. மனம் நோகும் படி பேசக் கூடாது.

03. கோபப்படக் கூடாது.

04. உணவில் குறை சொல்லக் கூடாது

05. பிறர் முன் திட்டக் கூடாது.

06. எந்த இடத்திலும் எப்பொழுதும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

07. முக்கிய விழாக்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு சேர்ந்து போக வேண்டும்.

08. மனைவியிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

09. தான் கூறுவதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்

10. மனைவியின் கருத்துக்களை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் அதை ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் தான் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

13. வாரத்திற்கு ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதத்திற்கு ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் கல்வியைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு மறை இருக்கக் கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமான விடயங்களை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் பிற பெண்களைப் பாராட்டக் கூடாது.

21. அடுத்தவர்களின் மனைவி அழகாக இருக்கிறார்கள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.

22. தனக்கு உள்ள கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலம் இல்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சிறு, சிறுத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சின்ன சின்ன உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உனது குழந்தை ‘ என்று ஒதுங்கி விடக் கூடாது.

27. தாயிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் தாயை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.

28. நேரத்திற்குச் உணவு உண்ண வேண்டும்.

29. உணவு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் செல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

32. எப்போதும் வீட்டு நினைப்பு  இருக்க வேண்டும்.

33. மனைவியின் பிறந்த நாள் தெரிந்திருக்க வேண்டும்.

34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் இருக்க கூடாது.

36. மனைவியின் வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.

37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

 கணவன் மனைவியிடம்  எதிர்பார்ப்பது என்ன?

01. அலுவலக நேரம் தெரிந்து அதற்கு முன் தயாரித்தல்.

02. காலையில் நேர காலத்துடன் எழுந்திருத்தல்.

03. எப்போதும் சிரித்த முகத்துடன் இருத்தல்.

04. நேரம் பாராது உபசரித்தல்.

05. மாமியாரை தனது தாயைப் போல் மதிக்க வேண்டும்.

06. கணவன் வீட்டாருடன் அனுசரித்துப் போக வேண்டும்.

07. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை கூறக் கூடாது.

08. அதிகாரம் பணணக் கூடாது.

09. குடும்ப ஒற்றுமைக்காக உழைக்க வேண்டும். சகோதர, சகோதரிகளிடையே பிரிவினை உண்டு பண்ணக் கூடாது.

10. கணவன் குற்றம் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.

11. கணவனை சந்தேகப்படக் கூடாது.

12. குடும்பச் சிக்கல்களை, பிரச்சினைகளை வெளியே சொல்லக் கூடாது.

13. பக்கத்து வீடுகளுக்கு சென்று அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.

14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது பிரச்சினைகள் குறித்துப் பேசக் கூடாது.

15. கணவரின் உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.

16. இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்.

17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.

18. பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

19. கொடுக்கும் பணத்தில் நிர்வகிப்புடன் குடும்பம் நடத்த வேண்டும்.

20. கணவரிடம் கூறாமல் கணவரது சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுக்கக் கூடாது.

21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.

23. தினமும் நடந்தவற்றை இரவில் சொல்ல வேண்டும்.

24. தாய் வீட்டில் கணவரை பற்றி குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.

25. அடக்கம், பணிவு அவசியம். கணவரின் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.

26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம்  செய்யக் கூடாது.

27. சுவையாகச் சமைத்து, பாசத்துடன் பரிமாற வேண்டும்.

28. கணவர் வீட்டுக்கு வரும் போது வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

29. பொது அறிவை, கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

30. பேசும் போது தெளிவாகப் பேசுவதுடன், சிறந்த முறையில் எடுத்துரைக்க வேண்டும்.

31. அவசியம் இல்லாதவற்றை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.

32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது ?

தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒரு விடயம். அது இல்லை எனின் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.

சுயமாகச் சிந்திப்பதற்கு, சுயமாகச் செயல் படுவதற்கு குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில். வீட்டு வேலைகளில் மற்றும் இதர வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.

குழந்தைகளை அச்சுறுத்தி, பயம் காட்டி, அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடவும் கூடாது. குழந்தைகளை அன்புடன், அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும்

.’நீ ராஜா அல்லவா? ரானி அல்லவா?’ என்கிற வார்த்தைகள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு, மண்டு, தொல்லை – போன்ற வார்தைகள் கூடவே கூடாது.

அச்சம், கூச்சமின்றி, உறுதியான மனம், உண்மையான பேச்சு, உயர்வான பண்புகள் குழந்தைகளுக்கு அமையப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ் வரும் சில காரணங்களால் தான் குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் பின்வரும் விடயங்களில் எந்தெந்த காரணங்களினால் மகிழ்ச்சி குறைந்துள்ளது என்பதை குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் அறிந்து பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

01. அடிக்கடி வரும் சண்டைகள் சச்சரவுகள்.

02. ஒருவருக்கு ஒருவர் குறை கூறும் பழக்கம்.

03. தத்தமது வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.

04. விரும்பியதைப் பெற்றுக் கொள்ள இயலாமை.

05. ஒருவரை ஒருவர் நம்பாமை.

06. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டாமை.

07. சுற்றுலாப் பயணம் போக இயாலாமை.

08. ஒருவர் வேலையில் பிறர் உதவி செய்யாமை.

09. விருந்தினர்களின் குறைவு.

10. பொருட்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.

11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை.

12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.

13. ஒருவர் மனம் நோகும் படி பேசுதல்.

14. மகிழ்சிகரமான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

உங்கள் பங்கு என்ன?

உங்கள் குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்க அல்லது தன் குடும்பத்தின் மகிழ்ச்சி குறைவதற்கு, தான் எந்த அளவு காரணமாக இருக்கின்றேன் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

01. அன்பாகவும் பணிவாகவும் பேசுவது

02. அடுத்தவர்கள் மீது அக்கறை காட்டுவது.

03. வீட்டை அழகாகவும் நேர்தியாகவும் வைத்துக் கொள்வது.

04. பிறரைக குறை கூறாமல் இருப்பது.

05. சொன்னவற்றை செய்து கொடுப்பது.

06. புன்முறுவல் முகத்துடன் இருப்பது.

07. அடுத்தவர்களுக்கு முன் மாதிரியாக நடந்து கொள்வது.

08. மற்றவரை நம்புவது.

09. ஒன்றாக சேர்ந்து பயணம் போக விரும்புவது.

10. பணிவுடன் நடந்து கொள்வது.

11. பொருட்களை எடுத்தால் உரிய இடத்தில் வைப்பது.

12. பிறர் வேலைகளில் உதவி செய்வது.

13. பிறருக்காக விட்டுக் கொடுப்பது.

14. பிறர் வருந்தும் போது, கவலையில் இருக்கும் போது ஆறுதல் கூறுவது.

15. சுறுசுறுப்பாக இருப்பது.

16. சிறிய விடயங்களைக் கூடப் பாராட்டுவது.

17. புதிய முயற்சிகளை ஊக்குவித்து, பராட்டுவது.

18. நகைச்சுவையாகப் கலகலப்புடன் பேசுவது.

19. அதிகமாக வேலைகளை செய்ய விரும்புவது.

20. செலவுகளைக் குறைத்துக் கொள்வதற்கு ஆலோசனை கூறுவது.

21. நேரம் தவறாது செயல்படுவது.

22. சுயநலம், தற்பெருமை பேசாமல் இருப்பது.

23. தெளிவாக புரியும் படி பேசுவது.

24. நேர்மையாக நடந்து கொள்வது.

25. அடுத்தவர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.

எல்லாவற்றுக்கும் யார் பொறுப்பு?

எமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. தினமும் பலரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். கட்டளையிடுகிறோம். எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா?

பல நேரங்களில் பகையும், வெறுப்பும் பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. இதன் விளைவாக – விரக்தியும், நரம்புத் தளர்ச்சி, இரத்த அழுத்தம், தீராத கவலை, அமைதியின்மை, நிம்மதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக முடியாமை , எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுதல், அஜீரணம் ஏன் இந்த நிலை?

நாம் மகிழ்சியுடன் இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சியாக இருப்பதற்கு, பிறர் நம்மை விரும்புவதற்கு, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர்திட, பிறரிடம் நமது காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள் இதோ…

பத்து கட்டளைகள்

01. பிறரிடம் அன்பு செலுத்துங்கள், அக்கறை காட்டுங்கள்.

02. ஆர்வத்துடன் அதிகமாக ஈடுபாட்டுடன் செயல்பட விரும்புங்கள்.

03. கெட்ட வார்தைகள், நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

04. மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுப்பதற்கும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

05. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

06. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவுகளை சிந்தித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

07. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறரின் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

08. ஐங் குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகிய வற்றைக் கடைப்பிடியுங்கள்.

09. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்

10. ஓஹோ, இவர் இப்படித் தான் என்று யாரையும் பார்த்தவுடன் மதிப்பிடாதீர்கள்.

வாழ்க்கையில் சிறந்த நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை தொடுவோம்.


SARINIGAR WM

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!