பிள்ளைகளுக்கான இணைய பாதுகாப்பு உதவிக் குறிப்புகள்

பாதுகாப்புபிள்ளைகளுக்கான இணைய பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் மற்றும் பிள்ளைகளின் ஆன்லைன் பாதுகாப்பிற்கான விதிகள்

❖ Personal Information. தனிப்பட்ட தகவல்.

உங்கள் பெற்றோரின் அனுமதியின்றி தனிப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டாம். அதாவது உங்கள் பெயர், வீட்டு முகவரி, பாடசாலையின் பெயர் அல்லது தொலைபேசி எண்ணைப் பகிரக் கூடாது.

நினைவில் கொள்ளுங்கள், யாராவது உங்களைப் பற்றிய தகவல்களைக் கேட்பதால், அவர்களிட் உங்களைப் பற்றிய தகவல்களை சொல்ல வேண்டும் என்று எவ்வித கடப்பாடும் இல்லை!

❖ Screen Name. திரைப் பெயர்.

உங்கள் திரைப் பெயரை உருவாக்கும் போது, உங்களின் பெயர் அல்லது பிறந்த திகதி போன்ற தனிப்பட்ட தகவல்களைச் சேர்க்க வேண்டாம்.

❖ Passwords. கடவுச்சொற்கள்.

உங்கள் கடவுச்சொல்லை உங்கள் பெற்றோரைத் தவிர வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அத்துடன், நீங்கள் ஒரு பொதுக் கணினியைப் பயன்படுத்தும் போது, கணினி பயன்பாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் நீங்கள் அணுகிய கணக்குகளை விட்டு வெளியேறுவதை (logout of the account) உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

❖ Photos. புகைப்படங்கள்.

உங்கள் பெற்றோரின் அனுமதியைப் பெறாமல் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ஆன்லைனில் இடுகையிட வேண்டாம்.

❖ Online Friends. ஆன்லைன் நண்பர்கள்.

உங்கள் பெற்றோரின் அனுமதியின்றி ஆன்லைன் நண்பரை சந்திக்க ஒப்புக் கொள்ளாதீர்கள்.

துரதிர்ஷ்டவசமாக, சில நேரங்களில் ஆன்லைனில் உள்ள நபர்கள் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். நீங்கள் ஆன்லைனில் படிக்கும் அனைத்தும் உண்மை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

❖ Online Ads. ஆன்லைன் விளம்பரங்கள்.

முதலில் உங்கள் பெற்றோரின் ஆலோசனைப் பெறாமல் ஆன்லைனில் எதையும் வாங்க வேண்டாம். சில விளம்பரங்கள் இலவசப் பொருட்களை வழங்குவதன் மூலம் அல்லது நீங்கள் எதையாவது பரிசுப் பொருள் வென்றுள்ளீர்கள் என்று கூறி ஒரு வழியாக உங்களை ஏமாற்றி உங்களது தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கு முயற்சிக்கலாம்.

❖ Downloading. தரவிறக்கம்.

மின்னஞ்சல் இணைப்பைத் திறப்பதற்கு அல்லது மென்பொருட்களை பதிவிறக்குவதற்கு முன் உங்கள் பெற்றோிடம் தெரிவியுங்கள்.

சில நேரங்களில் இணைப்புகளில் வைரஸ்கள் காணப்படலாம். உங்களுக்குத் தெரியாத ஒருவரிடமிருந்து வரும் இணைப்புகளை ஒரு போதும் திறக்க வேண்டாம்.

❖ Bullying. கொடுமைப்படுத்தல், மிரட்டல்.

இழிவான அல்லது அவமதிக்கும் செய்திகளை அனுப்பவோ அல்லது அவற்றுக்கு பதிலளிக்கவோ வேண்டாம். இது போன்ற விடயங்கள் காணப்பட்டால் அதைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள்.

உங்களுக்கு அசௌகரியமாக உணரும் ஏதாவது ஆன்லைனில் நடந்தால், உங்கள் பெற்றோருடன் அல்லது உங்கள் ஆசிரியருடன் அதைப் பற்றி பேசுங்கள்.

❖ Social Networking. வலைத்தளங்கள்.

பல சமூக வலைத்தளங்கள் ( பேஸ்புக், ட்விட்டர், மைஸ்பேஸ், டிக்டாக்) மற்றும் வலைப் பதிவு ஹோஸ்டிங் வலைத்தளங்களில் பதிவை பெற்றுக் கொள்ள குறைந்தபட்ச வயது கேட்கப்படும். இது உங்களைப் பாதுகாப்பதற்கான அறிவிப்பாகவும் தேவையாகவும் உள்ளது!

❖ Research. ஆராய்ச்சி (கல்வி).

கல்வி நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான மற்றும் சிறந்த இணையதளங்களைப் பற்றி உங்கள் நூலகர், ஆசிரியர் அல்லது பெற்றோருடன் பேசவும்.

பாடசாலைத் திட்டப் பணியொன்றில் நீங்கள் இணையத் தகவலைப் பயன்படுத்தினால், அந்தத் தகவல் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதை விளக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பிள்ளைகளின் ஆன்லைன் பாதுகாப்பிற்கான விதிகள்

01. எனது முகவரி, தொலைபேசி எண், பெற்றோர் பணியிட முகவரி/தொலைபேசி எண் அல்லது எனது பள்ளியின் பெயர் மற்றும் இருப்பிடம் போன்ற தனிப்பட்ட தகவல்களை எனது பெற்றோரின் அனுமதியின்றி நான் வழங்கமாட்டேன்.

02. எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் எந்தத் தகவல் கிடைத்தாலும் உடனடியாக என் பெற்றோரிடம் கூறுவேன்.

03. எனது பெற்றோருடன் முதலில் சரிபார்க்காமல் ஆன்லைனில் “சந்திக்கும்” ஒருவருடன் பழகுவதை நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

ஆன்லைனில் அறிமுகமாகிய நண்பரைப் சந்திப்பதற்கு என் பெற்றோர் சம்மதித்தால், அது ஒரு பொது இடத்தில் இருப்பதை உறுதி செய்து, என் அம்மா அல்லது அப்பாவை அழைத்து வருவேன்.

04. எனது படத்தையோ அல்லது வேறு எதையும் எனது பெற்றோரிடம் கேட்காமல் ஒருவருக்கும் அனுப்ப மாட்டேன்.

05. மோசமான அல்லது எந்த வகையிலும் எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் எந்த செய்திகளுக்கும் நான் பதிலளிக்க மாட்டேன்.

அவ்வாறன ஒரு செய்தி வந்தால் அது என் தவறல்ல என்பதை அறிவேன் அத்துடன் அதைப் பற்றி உடனடியாக எனது பெற்றோரிடம் கூறுவேன், இதனால் அவர்கள் சேவை வழங்குநரைத் தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

06. நான் எனது பெற்றோருடன் கதைத்து ஆன்லைனில் செல்வதற்கான விதிகளை அமைத்துக் கொள்வேன். நான் ஒரு நாளைக்கு ஆன்லைனில் இருக்கக்கூடிய நேரம் மற்றும் நான் பார்வையிட பொருத்தமான பகுதிகள் ஆகியவற்றை பெற்றோருடன் இணைந்து முடிவு செய்வோம். அவர்களின் அனுமதியின்றி நான் மற்ற பகுதிகளை அணுகவோ அல்லது அவர்களின் விதிகளை மீறவோ மாட்டேன்.

07. எனது இணைய கடவுச்சொல்லை எனது பெற்றோரைத் தவிர வேறு யாருக்கும் (எனது சிறந்த நண்பர்களுக்கும் கூட) கொடுக்க மாட்டேன்.

08. மென்பொருளைப் பதிவிறக்க அல்லது நிறுவுவதற்கு முன் அல்லது எங்கள் கணினியைப் பாதிக்கக்கூடிய அல்லது எனது குடும்பத்தின் தனியுரிமையைப் பாதிக்கக்கூடிய எதையும் செய்வதற்கு முன் நான் எனது பெற்றோரிடம் தெரிவிப்பேன்.

09. நான் ஒரு நல்ல ஆன்லைன் குடிமகனாக இருப்பேன், மற்றவர்களைப் புண்படுத்தும் அல்லது சட்டத்திற்கு எதிரான எதையும் செய்ய மாட்டேன்.

10. ஆன்லைனில் எப்படி கல்வி, பொது அறிவு விடயங்களைக் கற்றுக்கொள்வது, இணையம், கணினி மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பற்றிய விடயங்களைப் பற்றி கற்றறிந்து எனது பெற்றோருக்கும் அதைப் பற்றி சொல்லிக் கொடுப்பேன்.

– தகவல் – SARINIGAR.com


Sarinigar Main Logo, About Us, Contact Us, Privacy PolicyX

Leave a Reply

error: Content is protected !!