இலங்கையின் தேசியக் கொடி

sri lankaதேசிய கொடியில் காணப்படும் சின்னங்கள் மற்றும் அதன் விளக்கங்கள்

இலங்கையின் தேசியக் கொடி, “சிங்கக் கொடி” என அழைக்கப்படுகின்றது. இது 1950–51 காலத்தில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்தக் கொடி, சிங்களர், தமிழர், முஸ்லீம் ஆகிய சமூகங்களின் ஒற்றுமையையும், இலங்கை நாட்டின் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றது.

இலங்கை சுதந்திரம் பெறும் வரை இலங்கையில் பிரித்தானிய ஒன்றியக் கொடி (Union Jack) பயன்படுத்தப்பட்டு வந்தது. 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றபோது, அப்போதைய பிரதமர் டி. எஸ். சேனாநாயக்க தலைமையில் தேசியக் கொடி உருவாக்கும் குழு அமைக்கப்பட்டது.

தேசியக் கொடியை உருவாக்கிய குழுவின் அங்கத்துவர்கள்.

  • எஸ்.டபிள்யூ.ஆர.டீ. பண்டாரநாயக
  • ஜோன். எல். கொதலாவல
  • ஜே. ஆர். ஜெயவர்தன
  • லலித் அபய ராஜபக்க்ஷ
  • டீ.பி. ஜாயா
  • எஸ். நடேசன்
  • செனரத் பரனவிதாரன

தேசியக் கொடியின் கலை வடிவமைப்பை அப்போதைய அரசு கலை நிறுவனத்தின் முதல்வர் திரு. ஜே.டி.ஏ. பெரேரா பொறுப்பேற்றதுடன் அதன் வடிவமைப்புப் பணியில் உதவியாளராக திரு. கலாசூரி எஸ்.பி. சார்லஸ் செயல்பட்டார்.

இலங்கை தேசியக் கொடி கடைசியாக 1972 ஆம் ஆண்டு சிறிது மாற்றியமைக்கப்பட்டது. அப்போது கலாச்சார விவகார அமைச்சின் செயலாளராகவும், மாநில சின்னம் மற்றும் தேசியக் கொடி வடிவமைப்புக் குழுவின் தலைவராகவும் இருந்த நிஸ்ஸங்க விஜயரத்னவின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் கீழ் இது மாற்றப்பட்டது. நான்கு கதிரை கால்களுக்கு பதிலாக நான்கு அரச இலைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கை தேசியக் கொடியின், அதன் சிங்கத்தின் உருவ சின்னம், மதச் சின்னங்கள், மற்றும் பல்லின ஒற்றுமையை பிரதிபலிக்கும் தனித்துவமான வடிவமைப்பால் உலகில் மிகவும் அடையாளம் காணப்படும் கொடிகளில் ஒன்றாகும்.

கொடியின் வடிவமைப்பு

இடப்புறம் (hoist side): பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம் கொண்ட இரண்டு செங்குத்து பட்டைகள். பச்சை மற்றும் செம்மஞ்சள் நிற பட்டை | தமிழ், முஸ்லிம், பெர்கர், மலே, ஜா, மலையக தமிழர் ஆகிய அனைத்து சிறுபான்மை இனத்தையும் குறிக்கின்றது.

வலப்புறம் (fly side): கடும் சிவப்பு (crimson) நிறப் பகுதி. அனைத்து இலங்கையினரதும் ஜீவ உதிரம் மற்றும் பண்டைய சிங்கள அரச கொடியின் பிரதிநிதித்துவம்.

மஞ்சள் நிற சிங்கத்தின் சின்னம்:

சிவப்பு பகுதியில் தங்க நிற சிங்கம் வலது கையால் வாள் (kastane sword) பிடித்திருக்கும்.
மக்களின் நன் நடத்தை, தலைமை, சதாரணத்துவம், பாரம்பரியத்திற்க்கு மரியாதை செய்வது மற்றும் சிங்கள இனம் சிங்கத்திடமிருந்து வரும் வரலாற்று கதையை அடிப்படியாகக் கொண்டது.

சிங்கத்தின் தலையில் உள்ள முடி மற்றும் வாலின் வளைந்த மேற்பகுதி, இந்த இரண்டு பகுதிகளையும் சமமாக வைத்திருப்பதன் மூலம், ஆட்சியாளருக்கும் குடிமக்களுக்கும் இடையே சமத்துவம் நிலவுகிறது, மேலும் நடுநிலைக்கு மரியாதை ஏற்படுகிறது.

சிங்கச் சின்னமானது இலங்கையின் பண்டைய அரச இராச்சியங்களின் கொடிகளில் காணப்பட்டது. அதனால் இது உலகின் மிகப் பழமையான தேசியக் கொடிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

மஞ்சள் நிற வாள் தார்மீக, நீதி நெறியுடன் நாட்டை ஆட்சி செய்து தாய் நாட்டின் பாதுகாப்புக்காக முன்னிற்றல்.

நான்கு அரச அரச மர இலைகள் சிவப்பு பகுதியின் நான்கு மூலைகளிலும் தங்க நிற அரச மர இலைகள்.

  • மெத்தா – அன்பு.
  • கருணா – காருண்யம்.
  • முதித்தா – மற்றவர் மகிழ்சியில் தானும் மகிழல்.
  • உபேக்ஷா – நன்மை,தீமை இரண்டினயும் சமமாக கருதுதல்.
    ஆகிய நான்கு தர்ம உபதேசத்தின் படி அனைத்து மதங்களையும் கௌரவிக்கும் உயரிய குணம்.

சம அகலமுள்ள மஞ்சள் எல்லை: முழு கொடியையும் சுற்றி தங்க நிற எல்லை.
தேசியக் கொடியின் அனைத்துப் பகுதிகளும் ஒன்றாகக் கட்டப்பட்டுள்ளன. அனைத்து இனங்களுக்கும் இடையே ஒற்றுமை. அமைதி, ஞானம் மற்றும் பரஸ்பர புரிதலை விளக்குகிறது.

தேசியக் கொடியை சரியாகப் பயன்படுத்துவது எப்படி

1. தேசியக் கொடியை ஒருபோதும் தரையில் தட்டையாகவோ அல்லது கிடைமட்டமாகவோ கொண்டு செல்லக்கூடாது, எப்போதும் கைத்தடியை நிமிர்ந்து கொண்டு செல்ல வேண்டும்.

2. தேசியக் கொடியை ஊர்வலத்தில் மற்ற கொடிகளுடன் எடுத்துச் செல்லும்போது, ​​அது ஊர்வலத்தின் வலது பக்கத்தில் இருக்க வேண்டும், வேறு கொடிகள் இருந்தால், தேசியக் கொடியானது அவற்றுக்கு மத்தியில் இருக்க வேண்டும்.

3. எதற்காகவும் அல்லது யாருக்காகவும் தேசியக் கொடியை சிறிது கூட தாழ்த்தக்கூடாது.

4. எந்த சூழ்நிலையிலும் தேசியக் கொடியை தரையில் வைக்கக்கூடாது.

5. தேசியக் கொடியை ஏற்றும்போது, ​​அது முழு விழிப்புடன் உயர்த்தப்பட வேண்டும், அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.

6. தேசியக் கொடி ஏற்றப்பட்டவுடன், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் அல்லது பாடப்பட வேண்டும், வேறு எந்த இசைக்கருவிகளும் இசைக்கப்படக் கூடாது.

7. சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட தேசியக் கொடியை காட்சிப்படுத்தக் கூடாது, மேலும் வேறு எந்தக் கொடி, பதாகை அல்லது அலங்காரமும் தேசியக் கொடிக்கு மேலே காட்டப்படக் கூடாது.

8. எந்த சூழ்நிலையிலும் தேசியக் கொடியை ஆடையாகவோ அல்லது அணிகலனாகவோ அணியக்கூடாது, மேலும் அரசு/இராணுவ இறுதிச் சடங்குகளில் அதை ஒரு துணியாகப் பயன்படுத்தலாம்.

9. ஜனாதிபதி உத்தரவின் பேரில் இராணுவப் படைப்பிரிவுகளுக்கு ஜனாதிபதி வண்ண நிகழ்ச்சியின் போது தவிர, தேசியக் கொடியில் எந்த அடையாளமோ, சின்னமோ, வார்த்தையோ அல்லது படமோ வைக்கப்படக்கூடாது.

10. தேசியக் கொடியின் எந்தவொரு பிரதிநிதித்துவத்தையும் அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

Leave a Reply